கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பட்ஜெட்டில் ஃபேர் அண்ட் லவ்லி திட்டம்: ராகுல் விமர்சனம்

 

Unknown
கருப்பு பணம் வைத்திருப்பவர்களைப் பாதுகாக்க மோடி அரசு வழி கண்டுபிடித்திருக்கிறது என்று ராகுல் காந்தி பேசினார். 

பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- 

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு மாற்ற மத்திய அரசு பட்ஜெட்டில் பேர் அண்ட் லவ்லி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. கருப்பு பணம் வைத்திருப்பவர்களைப் பாதுகாக்க மோடி அரசு வழி கண்டுபிடித்திருக்கிறது. கருப்பு பணத்தை பதுக்குவோரை சிறையில் தள்ளுவோம் என்று அவர்கள் கூறிய வாக்குறுதி என்ன ஆனது? 

வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்தார். அதுவும் நிறைவேறவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மோசமான திட்டம் என்றார் மோடி. தோல்வியடைந்த திட்டம், நாட்டையே அழித்துவிட்டது, ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக நான் அந்த திட்டத்தை நீக்க மாட்டேன் என்றார். 

அதேசமயம், அருண் ஜெட்லியோ, அந்த திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்று என்னிடம் கூறினார். அப்போது, இதை ஏன் உங்கள் பாசிடம் (மோடி) இதை சொல்லவில்லை? என்று நான் கூறினேன். தற்போது அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கியபோது, நான் கண்களை மூடிக்கொண்டு, இது சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் என்று நினைத்துக்கொண்டேன். 

நாட்டிற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத கண்ணையா குமாரை இந்த அரசு இன்னும் சிறையில் வைத்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட ரோகித் வெமுலாவின் தாயாரை சந்தித்து மோடி ஆறுதல் கூறவில்லை. 

இவ்வாறு ராகுல் பேசினார்.