தலைவர் அஷ்ரப் கல்முனையில் ஆரம்பித்து வைத்த வெளிநாட்டு பணியம் இரவோடு இரவாக அம்பாறைக்கு மாற்றம் !

 அஷ்ரப். ஏ. சமத்

 மறைந்த தலைவா் எம். எச். எம் அஸ்ரப் அவா்கள் புனா் வாழ்வு மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன் கல்முனையில் ஆரம்பித்த  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இப் பிரதேச மத்திய கிழக்கு செல்லும் இளைஞா்களின் நன்மை கருதி  இவ் அலுவலகத்ததை ஆரம்பித்து  வைத்தாா். ஆனால் இவ் அலுவலகம் கல்முனையில் மூடப்பட்டு   மாா்ச் 1ஆம் திகதியுடன்   அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

 

தென்கிழக்கின் முக வெற்றிலையாக இருந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச மக்களும் தத்தமது பகுதிகளில் அரச அலுவலகங்கள்  நிருவாக சேவைகைளை கல்முனையிலும் மர்ஹூம் அஸ்ரப்  விஸ்தரிந்திருந்தாா். சகல மக்களும் சகல  நிருவாகங்களையும்   சகல பிரதேச மக்களும் அனுபவிக்கும் பொருட்டே அவா் சில அலுவலகங்களை முஸ்லீம் தமிழ்  பிரதேசங்களிலும்  அமைத்தாா்.
இதற்காக மர்ஹூம்  அஸ்ரப் அவா்களின்  அமைச்சின் தொழில்நுடபக் கல்வி ஆலோசகராக இருந்த  எம்.எச்.ஏ. சமட் அவா்களினை அழைத்து பல்வேறு திட்டங்களை வகுக்குமாறு பணித்தாா் .  அதன் வெளிப்பாட்டின் ஒரு அங்கமாகவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கல்முனைக்கென ஒரு அலுவலகத்தினை ஆரம்பித்து வைத்தாா்.   இதற்காக மருதமுனை ஜெமீல் என்பவரைக் கூட  முகாமையாளராக நியமிததிருந்தாா். 
அத்துடன் தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஒழுவில் துறைமுகம்,  நைட்டா  நிலையம், நிந்தவுரில் அம்பாறை மாவட்டத் தொழிற்பயிற்சி அலுவலகம், கல்முனை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை,  விவசாய விஸ்தரிப்பு நிலையம், மீன்பிடி அலுவலகம்  போன்ற அலுவலகங்களையெல்லாம் தென்க கிழக்கு முக வெற்றிலைக்காக கொண்டு வந்தாா்.   அம்பாறையின்  கரையோர பிரதேச மக்கள் நாளாந்தம் தமது அலுவல்களுக்கு  அம்பாறை சென்று கஸ்டப்படுவது, போக்குவரத்து மற்றும் மொழிப்பிரச்சினைகள் தமிழ்  முஸ்லீம் கள் அப்போதைய யுத்த சூழ்நிலையில் பாதுகாப்பு கொடு பிடிகளையும்   கருத்திற்கொண்டு சில நிர்வாகங்களை தமது பிரதேச மக்களும் அனுபவிக்கும் முகமாக அம் மக்களது  காலடியில் நிறுவாக அலுவலகங்களை கொண்டு  வந்து நிறுவினாா். 
2_Fotor
 
இந்த வேலைவாய்ப்பு  அலுவலகம் மாா்ச் 1முதலாம் திகதி 19 வருடத்திற்கு பிறகு  கல்முனை மூடப்பட்டு அம்பாறையின்  உகனை வீதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சாய்ந்தமருதுாரில் இருந்த இந்த அலுவலகம் கடந்த வருடம் மட்டும் 3 கோடி ருபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. பொத்துவில் தொட்டு மட்டக்களப்பு வரையிலான தமிழ் பேசும் மக்களே இதனால்  பிரயோசனமடைந்தனா்.  இவ் அலுவலகம் வாடகை கூடுதலாக அரச சட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்டாலும்  கல்முனை இல்லாவிட்டாலும் சம்மாந்துறை , நிந்தவுர் பிரதேசத்தில் ஆவாது குறைந்த வாடகைக்கு கட்டிமொன்றை பெற்று இவ் அலுவலகத்தை மாற்றி இருக்கலாம்.  
இவ் அலுவலகத்திற்கு வருகை தந்து  கொழும்பில் தமது தொழிலாளா்கள்  செலுத்தலை பத்தரமுல்லைக்கு வந்து செலுத்துவதை விட தமது பிரதேரசத்தில் உள்ள அலுவலகத்தில் அருகில் உள்ள வங்கியில்  செலுத்தி தமது கடவுச் சீட்டில் செலுத்திய முத்திரை பதித்துக் கொள்வதற்கு இவ் அலுவலகம் வசதியாக இருந்து வந்தது. அத்துடன் வெளிநாட்டு முகவர் நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் அன்மைக்காலமாக பல ஆரம்பிக்க்பபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளா்கள் வீட்டுப் பணிப்பெண்கள் தமது வேலைவாய்ப்பு பணியகத்திற்குரிய பயிற்சிகள் என்.வி.கியு போன்ற சான்றிதழ்களையும் இவ் அலுவலகத்தில் இலகுவாக பெற  வாய்ப்பாக இருந்தது. ஏற்கனவே அம்பாறையிலும் ஒர்  அலுவலகம்  உள்ளது அதில்   வருமானம் இல்லை. நஸ்டத்திலேயே இயங்குகின்றது.  அம்பாறை கரையோர பிரதேசங்களில் இருந்து அம்பாறைக்குச் சென்று உகனை வீதியில் தற்பொது இவ் அலுவலகம் அமைக்கப் பெற்றுள்ளது. அங்கும் வங்கிப்  பணத்தைச் செலுத்த உகனை வீதியில் இருந்து 2 கீ. மீற்றா் அப்பால் சென்று அம்பாறை நகருக்கு சென்றுதான் வங்கியில் பணம் செலுத்தி மீண்டும் இவ் அலுவலகத்திறகு மீள வரவேண்டியுள்ளது..    
slmc rauff hakeem hasan ali basheer
கடந்த பாராளுமன்றத் தோ்தலிலும் ஜனாதிபதித் தோ்தலிலும் 90 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தனா். கடந்த பொதுத் தோ்த்லிலும்  அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ்  3 பாராளுமன்ற உறுப்பிணா்களையும் தெரிபு செய்துள்ளனா். மறைந்த தலைவா் 19 வருடங்கள்முன் ஆரம்பித்து இதுவரை செயற்பட்டு வந்த அலுவலகத்தை அம்பாறைக்கு கொண்டு செல்வதை தடுத்திருத்திருக்க வேண்டும்.  இலாபம் மீட்டும் அலுவலகங்களை அம்பாறைக்கு கொண்டு சென்று அம்பாறை அலுவலகம் நஸ்டத்தை ஈடு செய்வதற்காக பொத்வில் தொட்டு நீலவனை வரையிலான தமிழ் பேசும் மக்களை கஸ்டத்திற்கு இட்டுச் செல்ல முற்படக் கூடாது  அரசின் நிர்வாகங்கள் சேவைகள் மக்களது காலடிக்கே செல்ல வேண்டும். தற்போது யுததம் தீாந்து அமைதியான சூழ் நிலையில் இவ்வாற செயல்களை இப்பிரதேச அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தல் வேண்டும்.  இதே போன்று நாளை கல்முனையில் உள்ள வீடமைப்பு அதிகார சபை , நகர அபிவிருத்தி அதிகார சபை, அலுவலகஙக்ள், தொழிற்பயிற்சி அதிகார சபை அலுவலங்களும் கல்முனையில் இருந்து அம்பாறைக்கு பறிபோகிவிடும்.