க.கிஷாந்தன்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார்.
தலதா மாளிகையில் 28.02.2016 அன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினால்கள், இறுதியில் `சொபின்’ பையொன்றைதான் மீட்க முடிந்துள்ளது.
ஆனால், அங்கிருந்த கல்லறையொன்றும் தோண்டப்பட்டுள்ளது. இதுதான் கவலைக்குரிய விடயமாகும். நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தை தோண்டுவது வழமையாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலமாக்கியவன் நான்தான். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்த பெருமையும் என்னையே சாரும். எனவே, கட்சிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டுள்ளது. வெளிநாட்டு ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன. இந்நிலையில் நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காகவே கைதுகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையில் கோட்டா, பஸில், நாமல், போன்றவர்கள் மற்றும் தன்னையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.