உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகமக்கள் கருத்தறியும் இரண்டாவது அமர்வில் பிரதிஅமைச்சர் அமீர் அலியின் கல்குடா ஆலோசனை சபை தனது அறிக்கையினை சமர்பித்தது!
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.
நாட்டில் பொதுவாக எல்லா பிரதேசங்களிலும் பேசப்பட்டுவருகின்ற உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாகமக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்திற்குஅறிக்கையாக சமர்பிக்கும் குழுவின் இரண்வது அமர்வுமட்டக்களப்பில் (26.02.2016)அன்று மண்முனை வடக்குபிரதேச செயலகத்தின் டேபர் மண்டபத்தில் இடம் பெற்றது.இதற்கு கல்குடாவின் அரசியல் தலைமையாகசெயற்பட்டுவரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர்எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் எதிர்கால பிரதேசஅபிவிருத்திகள், அரசியல் முன்னெடுப்புக்கள், அடங்கலானமேலும் பல அபிவிருத்தி பணிகளை எவ்வாறு பிரதி அமைச்சர்செயற்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக பிரதி அமைச்சர்அமீர் அலிக்கு ஆலோசனை வழங்குகின்ற முக்கிய சபையாககல்குடாவில் செயற்பட்டு வரும் கல்குடா ஆலோசனைசபையானது குறித்த இரண்டாவது அமர்விற்கு தங்களதுபிரதி நிதிகளாக எம்.எஸ்.கே.ரஹ்மான்,முன்னால் பிரதேசசபை உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி, எம்ஜே.எம்.அல்பத்தாஹ், ஏ.எல்.எம்.பாரூக் ஆகியோர்களை அனுபியிருந்தது. குரித்தகல்குடா ஆலோசனை சபையின் பிரதி நிதிகள் மக்களின்கருத்துக்களையும், அதன் பெருமதிமிக்கஆலோசனைகளையும் அறிக்கையாக இரண்டாவதுஅமர்வில் சமர்பித்திருந்தது.
பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆலோசனை சபையானதுசமர்பித்த உத்தேச அரசியல் அமைப்பு சம்பந்தமானஅறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் திட்டமாற்றம் தொடர்பான முன் மொழிவுகள்…
1). ஆட்சி முறை:-
A. பாராளுமன்ரத்திற்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி ஆட்சிமுறையாக இருத்தல் வேண்டும்.
B. ஒற்றை ஆட்சி நாடாக இருத்தல் வேண்டும்.
C. . பாராளுமன்றம் 251 உறுப்பினர்களை கொண்டிருத்தல்வேண்டும்
D. . பாராளுமன்ற உறுப்பினர்கள் 251 பேரும் நாட்டில்இருக்கும் விகிதாசாரத்திற்கேற்ப தெரிவு செய்யப்படவேண்டும்.
E. . தெரிவுகள் விகிதாசார முறை மூலம் அல்லதுதொகுதிவாரியும் விகிதாசாரமும் கலந்த முறையில்அமைத்தல் வேண்டும்.
F. . தொகுதிவாரி முறை மூலம் பின்பற்றபடுமாயின்சிறுபான்மை சமூகத்தின் உறுப்புறுமையினைஉறுதிப்படுத்தும் வகையில் தொகுதிகள் மீள் நிர்ணயம்செய்யப்படல் வேண்டும். இரட்டை அங்கத்துவ தொகுதிகள்உருவாக்கப்படல் வேண்டும்.
G. . கலப்பு தேர்தல் முறை ஒன்றாயின் தொகுதி ரீதியாக 70 விகிதாசர ரீதியில் 30 விகித தெரிவு செய்யப்பட வேண்டும்இதில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல்வேண்டும்.
H. . முஸ்லிம்களின் விகிதாசரத்திற்கேற்ப 22 பாராளுமன்றஉறுப்பினர்கள் என்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
2) ஜனாதிபதித்துவ ஆட்சி முறை:-.
A. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு மக்களால்தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும்.
B. ஜனாதிபதி பாராளுமன்ரத்திற்கு பொறுப்பு சொல்லும்நிறைவேற்று அதிகாரம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
C. மக்களால் நேரடி தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்படுபவாரக இருத்தல் வேண்டும்.
D. தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பின்19வது திருத்தத்திற்கேற்ப ஜனாதிபதியின் அதிகாரங்கள்வரையறுக்கப்பட்டிருப்பது பொறுத்தப்பாடுடையதாகும்.
நியாப்படுத்துதல்…….
A. ஒரு நாடு உறுதியாக நிருவகிக்கப்படவும், தொடராக அபிவிருத்தி செய்யப்படவும் ஒருநிறைவேற்று அதிகாரம் தேவை.
B. பல்லின சமூதயத்தினை கொண்ட ஒரு நாட்டிற்குநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறை தேவை.
C. சிறுபான்மையோரின் வாக்கும்தேவைப்படுவதினால் சிறுபான்மையினரின்உரிமைகள் பாதுக்கக்கப்படல் வேண்டும்.
பிரேரனை:-
A. 19வது திருத்தத்திற்கு அமைவாக நிறைவேற்றுஅதிகாரம் யாப்பில் உறுதி செய்யப்படல் வேண்டும்.
B. தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவ்வினங்கள்சார்ந்த இரு (தமிழ், முஸ்லிம்) உப ஜனாதிபதிகளைபாராளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்படவேண்டும்.
3). அதிகாரப் பகிர்வு:-
A. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதுமாகாணங்களும் ஒன்பது மாகாண சபைகளைகொண்டிருக்க வேண்டும்.
B. மாகாணங்கள் அனைத்தும் தனித்தனியாக இயங்கவேண்டும்.
C. வடக்கு மாகாண சபையுடன் கிழக்கு மாகாண சபைஇணைக்கப்பட கூடாது.
D. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதாகஇருந்தால் வடக்கில், கிழக்கிலுள்ள மாவட்ட அடிப்படையில்இன வீதத்திற்கு ஏற்ப காணிப்பங்கீடு செய்யப்பட்டுஅவைகளை உள்ளடகியதான முஸ்லிம் மாகாண அலகுஉருவாக்கபட வேண்டும்.
E. மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்புகாணி பங்கீடு என்பன அமைத்தல் வேண்டும்.
F. மாகாண சபையின் அமைச்சுப்பதவிகளில்சிறுபான்மையோறுக்கான இட ஒதுக்கீடு உள்வாங்க்கப்படவேண்டும்.
G. இரு மாகாணங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டமாகாணங்கள் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுயாபில் வரையறை செய்யப்படல் கூடாது.
H. மாகாண சபைக்கென சொல்லப்பட்ட அதிகாரங்கள்வழங்கப்பட வேண்டும். அதன் அதிகாரங்கள்உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல்முறை……….
A. தற்பொழுது நடைமுறையில் உள்ள விகிதாசரமுறை ஏற்புடையதாகும்.
C. விகிதாசார தேர்தல் முறை இல்லாமல் ஆக்கபட்டுதொகுதிவாரி பிரதி நிதித்துவ முறைகொண்டுவரப்படுமாயின் சிறுபான்மை பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படும் வகையிலானதொகுதிகள் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.
D. கலப்பு தேர்தல் முறை ஒன்றுநடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஏற்பாடுகள்செய்யப்படுமாயின் சிறுபன்மை பிரதி நித்தித்துவம்உறுதிபடுத்தப்படும் வகையில் அமையப் பெறவேண்டும்.
இன, மத, மொழி…..
A. மத சமத்துவம்:- பெளத்த மதத்தை அரசுபேணிக்காப்பது போன்ற ஏனைய மதங்களும்யாப்பில் சம அந்தஸ்துடன்பேணிப்பாதுக்கக்கப்படல் வேண்டும்.
B. இனம்:- இலங்கை ஜனநாய சோசலிசகுடியரசிற்குள் வாழும் முஸ்லிம்களைஇனக்குழுவாக குறிப்பிடாமல் இலங்கைமுஸ்லிம்கள் என அழைக்கப்படுவதற்கான தனமையாப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
C. மொழி:- சிங்களம், தமிழ், அரச கரும மொழிஎன்பது தொடர்ந்து பேணப்பட வேண்டும்.
சிறுபான்மையோர் காப்பீடுகள்…..
சோல்பரி அரசியல் திட்டத்தில் சொலப்பட்ட அரசியல்அமைப்பின் 29வது விதியிலுள்ள சிறுபான்மையோர்காப்பீடுகள் என்பதற்கு ஒத்த உறுப்புரைகள்உள்வாங்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற பிரதி நிதித்துவம்…….
மட்டக்களப்பு மாவ்வட்டதில் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு, என்ற மூன்று தொகுதிகள் உள்ளது.இவ்மூன்று தொகுதிகளிலும் தமிழ் சமூகமேபெரும்பான்மையாக உள்ளது. எனவே முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்படும் வகையில்…
A. கல்குடா தொகுதி இரட்டை அங்கத்தவர்தொகுதியாக்கப்பட வேண்டும்
B. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் இரண்டாவதுபிரதி நிதித்துவத்தினை முஸ்லிம்கள் பெறும்வகையில் உறுதி செய்யப்படல் வேண்டும்.
C. எந்த வகையிலேனும் மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து இரண்டு முஸ்லிம்பாராளுமன்ற உறுப்புறுமையை உறுதி செய்யவேண்டும்.
நியாயப்படுத்துதல்…….
1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல்தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்களும் தமிழர்களாகஇருந்தமையும் அவ்வருட தேர்தலில் மட்டக்களப்புமாவட்டத்தில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் இல்லாமல்போனமை. இதன் காரணமாக மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த மேற்தரப்பட்டமுன்மொழிவுடன் பின்வரும் பிரேரணையும்இணைக்கப்படுகின்றது.
பிரேரணை….
கல்குடா தொகுதியுடன் இணைந்திருந்த ஏறாவூர் பிரதேசம்1972ம் ஆண்டில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியுடன்இணைக்கப்பட்டது.இதனை மாற்றி மீளவும் ஏறாவூரை கல்குடா தொகுதியுடன் இணைத்து கல்குடாவினைஇரட்டை அங்கத்தவர் தொகுதியாக தொகுதி நிர்ணயம்செய்தல் வேண்டும்.