அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய ஒரு கோடி பேர் வெளியேறுவார்கள்: டொனால்ட் டிரம்ப்

donald trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நான் அதிபராக ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக குடியேறிய ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வெளியேறுவார்கள் என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான ஹுஸ்டன் நகரில் நேற்று ஆதரவு திரட்டிய டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் வெளியேறுவார்கள். உரியமுறையில் விண்ணப்பித்து அவர்களில் சிலர் மீண்டும் இங்கு வருவார்கள். அது அவ்வளவு எளிதான நடைமுறையாக இருக்காது. ஆனால், நியாயமான நடைமுறையாகவும், சிறப்பான நடைமுறையாகவும் இருக்கும்.

அவர்கள் தாமாகவே முன்வந்து இங்கிருந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகள் வரிசையில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.