இந்தியா, சீனாவில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலைவாய்ப்புகளை மீட்டுக்கொண்டு வருவேன் என்று டோனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சி தரப்பிலான அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”அமெரிக்காவிடம் இருந்து இந்தியா, சீனா, மெக்ஸிகோ, ஜப்பான் மற்றும் வியட்னாம் உள்ளிட்ட நாடுகள் வேலைவாய்ப்புகளை எடுத்துச் சென்றுவிட்டது.
ஆனால் அமெரிக்க-ஆப்ரிக்க இளைஞர்களில் 58 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நான் அதிபரானால் மேற்குரிய நாடுகளில் இருந்து வேலைவாய்ப்புகளை திரும்ப கொண்டு வருவேன்.” என தெரிவித்துள்ளார்.
இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அண்மையில் கருத்து தெரிவித்து இருந்த டிரம்ப் தற்போது விமர்சித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.