இந்நிலையில் தான் சட்டவிரோதமாக யானைக்குட்டியை வளர்க்கவில்லை என்றும், தனது விகாரை அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட யானைக்குட்டியை அன்புடன் பராமரித்ததாகவும் அவர் சுயவிளக்கம் அளித்துள்ளார்.
அவரது இந்த சுயவிளக்கத்தை ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள நேர்காணலில்,உடுவே தம்மாலோக தேரர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி கொண்ட யானைக்குட்டியொன்றை யாரேனும் ஒருவர் கைவிட்டுச் செல்வார்கள் என்று நினைப்பது கூட சிரிப்புக்கிடமானது.அவ்வாறு கைவிட்டுச் சென்றிருந்தால் கூட யானை வளர்ப்பதற்கு அனுமதிப்பத்திரம் தேவை என்ற சிறிய விடயம் கூட தம்மாலோக தேரருக்கு போயிருக்க முடியாது.
ஆகவே தம்மாலோக தேரர் தெரிந்தே பொய் சொல்கின்றார். அதன் மூலம் அவர் பௌத்த மதத்துக்கும் பாரிய இழுக்கைத் தேடிக் கொடுத்துள்ளார் என்றும் விஜித ஹேரத் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.