ஹம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் காணியை சீனா கோரியுள்ளது. முதலீட்டு வலயமொன்றை உருவாக்க இவ்வாறு ஆயிரம் ஏக்கர் காணியை சீனா கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன முதலீடுகள் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனங்கள் இலங்கையில் கப்பல் கட்டுமான நிறுவனமொன்றை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆந்திர பிரதேச அரசாங்கம் சீனாவிற்கு 10,000 ஏக்கர் காணியை வழங்கி முதலீடு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.