ஜனாதிபதியின் அதிரடி – பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அதிகாரங்கள் அதிகரிப்பு !

President-Maithripala-Sirisena5
பிரபல அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் அடுத்த சில வாரங்களில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரங்களை அதிகரித்துள்ளதால், அதன் செயற்பாட்டுத் திறன் அதிகரித்துள்ளதுடன் முறைப்பாடுகளும் அதிகளவில் கிடைத்து வருகிறது. 

பெப்ரவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட 1952/2 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம், குற்றம் சுமத்தப்படும் எந்த நபராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது விசாரிக்கவும் அவர்களின் வங்கி கணக்குகளை நீதிமன்ற அனுமதியின்றி சோதனையிடவும் ஜனாதிபதி, நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அதிகாரமளித்துள்ளார். 

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களின் வங்கி கணக்குகளை மாத்திரமல்லாது அவர்களின் பிள்ளைகளின் வங்கி கணக்குகளை சோதனையிடும் அதிகாரம் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.