சிரியாவில் தலையீட்டை ஏற்படுத்தியதே துருக்கிக்கும் ரஷ்யாவிற்கு இடையே பதற்றமான சூழல் நிலவ காரணம் என்று பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அந்நாட்டு வானொலி ஒன்றில் பேசியதாவது:-
துருக்கி சிரியாவில் தலையிட்டு இருக்கிறது. அங்குதான் ஆபத்தான போர் உருவாகியுள்ளது. அதனால் தான் பாதுகாப்பு கவுன்சில் தற்போது மாஸ்கோவில் ஆலோசனை நடத்துகிறது.
ஒரு தலைப்பட்சமாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை ஆதரித்தால் ரஷ்யாவால் சமாளிக்க முடியாது. அதனால் தான் சிரியா குறித்து ஆலோசனை நடத்த மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்வில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற நான் விரும்பவில்லை. மாஸ்கோவிற்கு நானாக சென்று எல்லோரும் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அதிபர் புடினிடம் வலியுறுத்தினேன்.
ஆனால், மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்வதையும், அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிரிய எல்லையில் பறந்த ரஷ்ய விமானம் சுடப்பட்டதை அடுத்து ரஷ்யா உடனான உறவு உடைய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.