முஸ்லிம்கள்; தமிழ் சகோதரர்களுடன் முரண்பட்டு என்றுமே வாழ முடியாது: சிலாவத்துறையில் அமைச்சர் றிசாத்

 

சுஐப் எம்.காசிம் 

வடமாகாண முஸ்லிம்களுக்கு புலிகள் தவறிழைத்தமைக்காக, தமிழ் சகோதரர்களுடன் முரண்பட்டு என்றுமே வாழ முடியாது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

7M8A0661_Fotor

மன்னார் சிலாவத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது,

சின்னச்சின்ன பிரச்சினைகளுக்காக நமக்குள் முட்டிமோதிக்கொண்டிருக்க முடியாது. தனிப்பட்ட சில நபர்களின் பிரச்சினைகளை சமூகத்தின் பிரச்சினைகளாக்கி, சிலர் அதனை கையிலெடுத்து இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளாக மாற்றி வருகின்றனர். இதற்கு நாம் இடமளிக்க முடியாது. இவ்வாறான பிரச்சினைகளை முளையிலே கிள்ளி எறியாவிட்டால், அது விஷ்வரூபம் எடுத்து அழிவுக்கே வழி வகுக்கும். உயிர்கள் அநியாயமாக பலியாகும். நாம் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இரண்டு சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ சாரதிகள் பிணங்கும்போது, அதை இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்றாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். 

7M8A0670_Fotor   

 30 ஆண்டு காலம் நாம் அனுபவித்தது போதும். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும், ஒற்றுமையும் பேணப்பட்டால் பிரச்சினைகள் வராது. 

தமிழ், முஸ்லிம் உறவு தழைத்தோங்குவதன் மூலமே இதனை சாதிக்க முடியு. 20 ஆண்டுகால இவ்அகதி வாழ்வில் நாம் பட்ட கஷ்டங்களை அனுபவமாகக் கொண்டு இனி வரும் காலங்களிலாவது நிம்மதியாக வாழ வேண்டும்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க எத்தனையோ சக்திகள் திட்டமிட்டு பணியாற்றுகின்றனர். இத்தகைய தடைகளுக்கு முகம் கொடுத்தே நாமும் பணியாற்ற வேண்டி இருக்கின்றது. நாம் பொறுமையை காத்த போதும் இனவாதிகள் என்னை விடுவதாக இல்லை. பெரும்பான்மை மக்களை உசுப்பி, கலவரம் ஒன்றை உருவாக்குவதே இவர்களின் இலக்கு. 

7M8A0659_Fotor

நாம் வீடு கட்டினால் குற்றம். காணியை சுத்தம் செய்தால் குற்றம். பாதையைப் புனரமைத்தால் குற்றம். இவ்வாறான பிரச்சினைகளுக்காக, உங்கள் பிரதிநிதியான எனக்கு 06 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தத்தில் மீள்குடியேற்றத்தை தடுப்பதே இவர்களின் பிரதான நோக்கம். 

இத்தனை பிரச்சினைகளுக்கும் மத்தியிலேதான் உங்களது பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

எத்தனை தடைகள் வந்தாலும் நான் மேற்கொண்டு வரும் தூய பணிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.