ஜே.வி.பி.யிடம் 1 பில்லியன் நஷ்டஈடு கோரி மனு !

kothaமக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவிடம் நஷ்டயீடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய நந்தசேன ராஜபக்ஷ விண்ணப்ப மனு அனுப்பி வைத்துள்ளார்.

 

கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியான சனத் விஜேவர்த்தனவின் ஊடாக இந்த  நஷ்டயீடு விண்ணப்ப மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டு மக்கள் மத்தியில் சிறந்த கீர்த்திநாமம் பெற்ற தனக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தனக்கு ஒரு பில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ மனுவில் கோரியுள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடைபெற்ற போது 130 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கோட்டாபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சுனில் வட்டகல ஊடகங்கள் மூலம் சுமத்தியுள்ள இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மனஉலைச்சல் அடைந்துள்ளதாகவும் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே விண்ணப்ப மனுவில் உள்ளது போன்று ஒரு வார காலத்திற்குள் தனக்கு நஷ்டயீடாக 1 பில்லியன் ரூபா வழங்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக சுனில் வட்டகலவிற்கு அனுப்பியுள்ள நஷ்டயீடு விண்ணப்ப மனுவில் தெரிவித்துள்ளார்.