குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் யோசித் ராஜபக்ஸ கடற் படையிலிருந்து பணி நீக்கப்படுவார் என கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.சீ.எஸ்.என் தொலைக்காட்சி மோசடி தொடர்பில் யோசித கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதிச் சலவையில் ஈடுபட்டதாக யோசித மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடற்படை விதிகளை மீறி அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யோசித தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் யோசித பணி நீக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யோசித கடற்படையில் எவ்வாறு இணைந்துகொண்டார், எவ்வாறு வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றுக்கொண்டார், கடற்படை அதிகாரியாக இருந்து கொண்டே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டமை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை போன்றன குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 2006ம் ஆண்டு கெடட் உத்தியோகத்தராக கடமையில் இணைந்து கொண்ட யோசித 2009ம் ஆண்டு பதில் துணை லெப்டினனாக பதவி உயர்த்தப்பட்டார்.
Home முக்கியச் செய்திகள் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் யோசித்த கடற் படையிலிருந்து பணி நீக்கப்படுவார் !