அமைச்சர் நஸீரின் அதிரடி நடவடிக்கையால் கிழக்கில் பல வைத்தியசலைகள் தரமுயர்த்தப்பட்டன !

அபு அஹ்னப்

 கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் இன்று மாலை 16.02.2016  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் கூடியது.
nazeer minis_Fotor
கிழக்கு மாகாண அபிவிருத்திகள் இவ்வருட ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் முன் மொழிந்த கோரிக்கைகளும் அமைச்சர் வாரியத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்த சில வைத்திய சாலைகளை தரமுயர்த்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள 
அன்னமலை ஆரம்ப வைத்தியப்பிரிவை ’சீ’ தரத்துக்கும்,
 மத்திய முகாமின் ‘சீ” தரத்தில் இருந்த வைத்திய சலையை ‘பி” தரத்திற்கும்,
இறக்காமம் ‘சி’ தரத்திலான வைத்தியசாலையை ‘ஏ’ தரத்திற்கும்,
 
ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவை ‘சி’ தரத்திற்கும்,
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை “ஏ’ தரவைத்தியசாலையாகவும்,
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள 
சந்திவெளி ‘சி” தரத்திலான வைத்தியசாலையை ‘பி’ தரத்திற்கும், 
மையிலடித்தீவு ‘சி” தர வைத்தியசாலையை “ஏ’ தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் குறிப்பிடுகையில் திருகோணமலை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேஷமாக விளங்கும் இறக்கக்கண்டியில் மத்திய மருந்தகம் புதிதாக அமைக்கவும் அமைச்சரவை வாரியம் முழு அனுமதி வழங்கியுள்ளதாகவும்,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.