ஜே.வி.பி.யின் . இணை அமைப்பான அகில இலங்கை பொதுமீன்பிடி ஊழியர் சங்கத்தின் முதலாவது தேசிய மாநாடு இன்று மாத்தறையில் நடைபெற்றது.
இதில் ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க,
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒருசில அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை.
ஏனெனில் கடந்த ஆட்சியில் கொள்ளையடித்தவர்கள்,ஊழல்வாதிகள், மோசடி செய்தவர்கள் அனைவரும் தற்போது இந்த அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தங்களுடைய குற்றச் செயல்களில் இருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளவே இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
அவ்வாறு திருடர்களை அரவணைத்துக் கொண்டு முன்னைய ஆட்சியை மட்டும் விமர்சிப்பது எவ்வகையிலும் அர்த்தமற்றது என்றும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நியாயமான கருத்து