ஏ.எஸ்.எம்.ஜாவித்
தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் கரம் கொடுப்போம் கலை வளர்ப்போம் எனும் கலை இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலை இலக்கிய ஊடகவியலாளர்கள் கௌரவம் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் போரசியர் துரை மகேந்திரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (14) ஒரே மேடையில் நடாத்தியது.
இந்நிகழ்வில் இலக்கிய இமயம் ஜெயகாந்தன் பற்றி ஞானபீடத்தைக் கண்டேன் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் வரவேற்புரையை நூலாசிரியர் கலைஞர் கலைச் செல்வனும், தலைமை உரையை பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் போரசியர் துரை மகேந்திரனும், நூலின் நயவுரையை கலைக் கேசரி ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை வழங்கியதுடன் சிறப்புச் சொற்பொழிவை பேராசியர் சபா ஜெயராசா வழங்கினார்.
இதன்போது நூல் வெளியீட்டை தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் செந்தில் வேலவர் பேராசியர் துரை மனோகரனிடம் வழங்குவதையும், நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசிம் உமர் வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜனிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்து வருகை தந்த பிரமுகர்களால் ஏனையோருக்கும் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.