இரும்பு சத்து மாத்திரை டி.என்.ஏ.வை பாதிக்கும்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

 

Unknownஉடல் நலத்துக்கு இரும்பு சத்து மிக அவசியமாகும். உடலில் ஆக்சிஜனை எடுத்து செல்வதில் இதன் பங்கு மிகவும் அவசியமாகும். எனவே இதை உலகில் லட்சக்கணக்கானவர்கள் உட்கொள்கின்றனர். அதே நேரத்தில் அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ரத்த சோகை ஏற்பட்டு உடலில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உருவாகிறது. அனைத்துக்கும் மேலாக சாப்பிட்ட 10 நிமிடத்தில் மிக முக்கியமான டி.என்.ஏ. மூலக்கூறுகள் பாதிப்படைகிறது.

இத்தகவல் இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே இரும்பு சத்து மாத்திரைகளை கவனமுடன் கையாளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.