இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்டவீரரான குமார் சங்கக்காரா, அவுஸ்ரேலியாவின் இருபது இருபது போட்டித்தொடரான பிக் பாஷ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி சார்பாக விளையாடுவதற்கு இரு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுள்ளார்.
இவருடன் மேற்கிந்தியதீவுகளின் சகலதுறைவீரரான டரன் சமியும் வெளிநாட்டு வீரராக பங்கேற்கவுள்ளார். சங்கக்காரவின் ஒப்பந்தம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு மிகப்பெரிய உயர்வு மட்டுமிலாமல் பிக் பாஷ் லீக்கிற்கே உயர்வாகும் என ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டேமியன் ரைட் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வருடம் 5ஆவது பிக் பாஷ் லீக்கின் சிறந்ததொரு ஓப்பந்தம் இதுவாகும் எனக்குறிப்பிட்ட டேமியன் ரைட், சங்கக்காரா சிறந்த துடுப்பாட்டவீரர் மட்டுமில்லாமல் சிறந்த தலைவரும் ஆவார். இவருடன் டரன் சமியின் வருகையால் எமது அணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உலகக்கிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளிருந்து ஓய்வு பெற்ற சங்ககக்காரா 130 டெஸ்ட் போட்டிகளிலும் 404 ஒருநாள் போட்டிகளிலும் 56 இருபது இருபது போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் இணைவது தொடர்பில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் பிக் பாஷ் லீக் சந்தோஷமான குடும்ப நட்புறவுடன் அமைந்த உயர்தர கிரிக்கெட் போட்டித்தொடர் என்றும் தனது சந்தர்ப்பதுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
குட் லக் சங்க