எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை ,அவருக்காக தான் போராட தயார் : அர்ஜுன ரணதுங்க !

arjuna nishantha
  சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நிஸாந்த ரணதுங்க நிதி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளார்.

இந்நிலையில் தனது சகோதரருக்காக தான் போராட தயாராக இருப்பதாக.நிஸாந்தவின் சகோதரரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நேற்றைய தினம் அவரது சகோதரரின் கைது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நிஸாந்த என்னுடைய சகோதரர். ஆகவே எனது சகோதரருக்காக நான் பேச முன்வந்துள்ளேன். சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் எனது எதிர்பார்ப்பு ஆனால் இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக செயற்படவில்லை.

எனினும் எனது சகோதரர் கைது தொடர்பாக நான் இதுவரை ஜனாதிபதியுடனோ, பிரதமருடனோ பேச்சுவார்த்ததைக்கு செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் யாருடன் இணைந்து செயற்பட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்று அதற்கான சிறந்த உதாரணம் தான் இன்று நிஸாந்தவின் கைது என்றும் அர்ஜுன தெரிவித்தார்.

எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என்று எனக்கு தெரியும் ஆனால் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அதனால் தான் நிஸாந்தவின் கைது தொடர்பில் சுயேட்சையாக செயற்படுவதாகவும் எனினும் சரியான நேரத்தில் அவருக்காக பேச முன்வருவேன் என்றும் அமைச்சர் அர்ஜுன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.