“சர்வதேச நீதிமன்றம் வேண்டாம், இராணுவ வீரர்கள் வேட்டையாடப்படுவதை தடைசெய்வோம்” !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமார சிங்க உட்பட மற்றும் பலர் கொழும்பு புறக்கோட்டை சம்புத்தா லோகா விகாரைக்கு இன்று வருகை தந்துள்ளனர்.

இவர்கள் “சர்வதேச நீதிமன்றம் வேண்டாம், இராணுவ வீரர்கள் வேட்டையாடப்படுவதை தடைசெய்வோம்” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் கையொப்ப வேட்டை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடாத்த உள்ளனர். 

இந்த கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையை புறக்கோட்டை சம்புத்தா லோகா விகாரையிலிருந்து ஆரம்பிப்பதற்காகவே இவர்கள் வருகை தந்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ இந்த நிகழ்வில் முதல் கையொப்பமிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். இதே போன்று நாடு முழுவதும் சென்று 10 இலட்சம் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். 

குறித்த நிகழ்விற்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் விகாரையில் குவிந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.