எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள் : ஹுசைனிடம் வடக்கு மக்கள் தெரிவிப்பு !

un_hr_jaffna1
எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். 25 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அரை நிரந்தர வீட்டில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எமக்கு துறைமுகம் வேண்டாம். விமான நிலையம் வேண்டாம். எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள் நாங்கள் நின்மதியாக வாழ விரும்புகிறோம்.

மேற்கண்டவாறு வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மருதனார் மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலைய மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  செய்த் அல் ஹுசைனிடம் தெரிவித்திருக்கின்றனர். 

இன்றைய தினம் யாழ்.வந்த மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி நலன்புரி நிலையத்திற்கு நண்பகல் 12 மணியளவில் விஜயம் மேற்கொண்டு மக்களுடைய நிலமைகள் தொடர்பாக அவதானித்திருந்ததுடன்,  மக்களுடைய வீடுகளுக்குள்ளும் சென்று மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். < 

இதன்போது மக்கள் தெரிவிக்கையில் எங்களுடைய சொந்த நிலங்களில் மிக சிறப்பாக வாழ்ந்த நாங்கள் தொழில், சுயமரியாதை, வீடுகள், காணிகள் எல்லாவற்றையும் இழந்த நிலையில் 25 வருடங்களாக வாழ்ந்து கொண் டிருக்கின்றோம். 

எமக்கு எங்களுடைய சொந்த நிலங்களே வேண்டும். இந்த நிலையில் இப்போ து எங்களுடைய நிலங்களை எடுத்து விமான நிலையம் அமைக்கப்போவதாகவும், துறைமுக ம் அமைக்கப்போவதாகவும் கூறுகின்றார்கள்.

எமக்கு விமான நிலையமும் வேண்டாம், துறைமுகமும் வேண்டாம். எங்களுடைய சொந்த நில ங்களே வேண்டும். எங்களுடைய சொந்த நிலங்களை எங்களுக்கு கொடுங்கள். என கேட்டுக் கொண்டனர். குறிப்பாக வயதான பெண்கள் கண்ணீர்மல்க தங்களுடைய நிலங்களை பெற்று க்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என கேட்டனர்.

இந்நிலையில் மக்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹீ சைன் அதிகாரிகளை சந்திப்பதை காட்டிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்பதிலேயே எமக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. இந்நிலையில் நாம் இங்கு வந்துள்ளோம். நீங்கள் உங்கள் பிரச்சினைகளை

பலருக்கு பல தடவைகள் கூறி சலித்துப்போயிருப்பீர்கள். ஆனால் எமது கடமை மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்து அதனை தெரியப்படுத்தவேண்டிய இடங்களுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதே அந்தவகையில் அதனை நாம் சிறப்பாக செய்வோம். மேலும் அடுத்த தடவை நாம் யாழ்ப்பாணம் வரும்போது வலி,வடக்கு மக்கள் அவர்களுடைய சொந்த நிலங்களில் இருப்பார்கள் என அவ ர் மேலும் தெரிவித்தார்.