தனது இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் கொழும்பை விட்டு வெளியில் செல்லவில்லை.
இந்த நிலையில், இன்று காலை அவர் யாபஹுவையிலுள்ள விகாரையொன்றுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது வருகை குறித்து அறிந்தவுடன் சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதியான சாலிந்த திசாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அவருக்கான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மேலும், மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த விகாரைக்கு மஹிந்த விஜயம் செய்திருப்பதை அறிந்தவுடன் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து அவருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஹிந்த உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.