ஹுசைன் அவர்களுக்கு சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக அஸ்மியின் வேண்டுகோள் !

azmy - hussain

 

மனித உரிமை ஆணையாளர் இளவரசர் உசைனின் வருகை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகத்துக்குமிடம் கிடையாது.

 
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லீம் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு இழக்கப்பட்ட அநீதிகள் உண்மையில் யுத்தத்தில் நேரடியாக சம்பந்தமில்லாத யுத்ததை நிகழ்த்திய இரு சாரராலும் திட்டமிட்டு முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ சர்வதேசமோ 2002 மாண்டுக்கு பின்னரான நிலைப்பாட்டிலிருந்து விலகி அதற்க்கு முன்னரான யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து மனித உரிமை மீறல் தொடர்பில் பேசி அதற்க்கான தீர்வு நோக்கி நகர்வது தான் முஸ்லீம் சமூகம் எதிர்பார்த்திருக்கும் விடயமாகும்.

 
இது தொடர்பில் குறைந்த பட்சம் வருகை தந்திருக்கும் ஆணையாளருடம் பேச வேண்டியதும் இது தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதும் எமது சமுகத் தலைவர்களது தலையான கடமையாகும். 2002 மாண்டு சமாதான உடன்படிக்கையின் போது தங்களை ஒரு குழுவாக இனங்காட்டியது போன்று முஸ்லீம் சமுகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பிலும் அசட்டையாக எமது தலைவர்கள் இருந்து விட கூடாது. அவ்வாறு இருந்து விடுவார்களானால் இந்த முஸ்லீம் சமுகத்துக்கு இவர்கள் செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகும்.

 

சமுகத்தை வழமையான பாணியில் பகடைக்காயாக இவ்விடயத்தில் பாவிப்ப நினைப்பதானது அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டிய விடயமாகும்
முஸ்லீம்கள் வடகிழக்கு யுத்த காரணங்களுக்காக பாதிக்கப்பட்டதே இலங்கையில் இடம் பெற்ற திட்டமிட்ட வெளிப்டடையான மனித உரிமை மீறலாகும்.

 

1. வட புல முஸ்லீம்களது திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு
2.கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்
3.வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லீம்களின் நிலங்களின் மீது அத்துமீறிய குடியமர்வு
4.வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் கொல்லப்பட்ட சுமார் 5000அதிகமானவர்களின் இனப்படுகொலை
5.அங்கவீனப்படுத்தப்பட்ட சுமார் 3800க்கு மேற்பட்டவர்கள்
தொடர்பிலும் முழுமையான ஆவணங்களை தயாரித்து ஐ.நா.மனித உரிமை ஆணையாளரிடம் பேச வேண்டியது சமுகத்தை தலைமைகளின் தலையான கடமையாகும்