முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை !

vkiuqjpjrsjkbmrianlz
 முன்னாள் அமைச்சர்கள் பலர் தமக்கு கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை என ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதுவரை அரசிடம் மீள கையளிக்கவில்லை.

அமைச்சர் பதவிகளில் இருந்து விலகி 13 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் அந்த வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

அதேவேளை 100 நாள் வேலைத்திட்டம் அமுலில் இருந்த போது 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவை பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரச வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றையும் அவர்கள் இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை. 

இது அரச நிதி மற்றும் நிர்வாக சட்ட திட்டங்களை மீறும் செயல் எனவும் இவர்களுக்கு எதிராக பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாடடின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஊழல் எதிர்ப்பு முன்னணி கூறியுள்ளது.