ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பாடசாலைகளின் மைதான அபிவிருத்திகள் தொடர்பானகலந்துரையாடல்; வவுனியா பட்டனிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.றம்சீன் தலைமையில்இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.ஆர்.டி.திஸாநாயக்கா, வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பாடசாலைகளின் மைதான அபிவிருத்திகள்என்பன பற்றி அதிபர்கள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையெடுத்து பிரதி அமைச்சர் ஹரீஸ், பாடசாலை மைதானங்களை உடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், பௌதீக வள அபிவிருத்தி போன்ற விடயங்களை விரைவில் தீர்த்து வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அஷ்ரஃப் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட பிரதி அமைச்சர்அதன் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் இதனை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும்உறுதியளித்தார்.