முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 17 பேரை இணைத்து கொண்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததுடன் அதனை தேசிய அரசாங்கம் என மகிந்த ராஜபக்ச கூறியதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அஹங்கம பிரதேசத்ததில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விமர்சிக்காதவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதை விமர்சித்து வருகின்றனர்.
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் வேறு சிரேஷ்ட நபர் ஒருவர் அறிமுகப்படுத்தினார். அவர்தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் பலர் இதனை மறந்து போயுள்ளனர்.
அவர்களுக்கு அன்றைய தேசிய அரசாங்கம் நல்லது, ஆனால் இன்றைய தேசிய அரசாங்கம் கெட்டது எனவும் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.