பாக்கிஸ்தான் இலங்கையின் நடுத்தர அடர்த்தி நார்பலகைக்கான இறக்குமதி வர்த்தக விலையினை நீக்கியுள்ளது !

11NOV2_Fotor
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை-பாக்கிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு புதிய வர்த்தக சலுகையை ஏற்படுத்தி உள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தினையும்; அதிகரித்துள்ளது என 
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்ககையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக முதல் நிவாரணம் இலங்கையில் இருந்து பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நடுத்தர அடர்த்தி நார்பலகைக்கான (MDF Board)  இறக்குமதி வர்த்தக விலை நீக்கமாகும்.
மேலும் அவ்வறிகையில் குறிப்பிட்டுள்ளதாவது: நடுத்தர அடர்த்தி நார்பலகையானது இலங்கையில் இருந்து பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாகும்.  இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 10% சத வீதம் நடுத்தர அடர்த்தி நார்பலகை பாக்கிஸ்தானின் ஏற்றுமதியாக காணப்படுகின்றது. மலேஷியாவுக்கு பின்னர் பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய விநியோகஸ்தராக இலங்கை உள்ளது. இந்தியாவை விட பாக்கிஸ்தான் நடுத்தர அடர்த்தி நார்பலகையினை பாரிய தொகையளவாக வாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை – பாக்கிஸ்தான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இலவச சந்தை அணுகலையும் அனுபவித்து வருகின்றனமையும் குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை அனைத்து நடுத்தர அடர்த்தி நார்பலகைக்கான இறக்குமதி; வர்த்தக விலையினை அகற்றும் பொருட்டு குறைந்தபட்ச மதிப்பு விலையினை நிர்ணயிப்பதற்காக ‘இறக்குமதி வர்த்தக விலை’ – (Import Trade Price – ITP) என ஒரு மதிப்பீட்டின் விதி முறையினை பாகிஸ்தான் அதிகாரிகள்  முன்வைத்தனர்.  ஆரம்பத்தில், நடுத்தர அடர்த்தி நார்பலகைக்கான இறக்குமதி மதிப்பீட்டு விதி முறை அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது பின்னர், பாகிஸ்தான் அதிகாரிகள், மற்றைய ஏற்றுமதி நாடுகளில் இருந்து இலங்கைக்கு மட்டும் ஒரு புதிய மதிப்பீட்டு விதி முறையினை அறிமுகப்படுத்தினர். 
 
கடந்த வருடங்களில் பாக்கிஸ்தான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மீதான வர்த்தக செயலாளர் மட்டத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் பாக்கிஸ்தானுக்கான இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்ககையின் அனுகூலங்கள் பிரதிகூலங்கள் முன்வைக்கப்பட்டதோடு சில தடைகளும் விவாதிக்கப்பட்டடது.எனினும் நவம்பர் 2014 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் மத்திய வர்த்தக அமைச்சரின் விஜயத்தின் போது,  இருதரப்பு கலந்துரையாடலில்,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வர்த்தக திணைக்கள அதிகரிகளுடன் இணைந்து இந்த விவகாரத்தினை எழுப்பினார. கராச்சியில் அமைந்துள்ள இலங்கையின் கொன்சியூல ஜென்றல் அலுவலகத்தினூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சு மற்றும் வர்த்தக திணைக்களமும்  பல தலையீடுகளை ஏற்படுத்தின இந்த விவகாரத்தின்  ஆரம்ப தீர்வு கெடுபிடியாக காணப்பட்டலும் இறுதி முடிவு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய வெற்றியை தந்துள்ளது. அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு புதிய மதிப்பீட்டு விதி முறையினை ஜனவரி 29 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு கொண்டுவந்தது. இதனடிப்படையில் பாக்கிஸ்தான் இலங்கையின் நடுத்தர அடர்த்தி  நார்பலகைக்கான (MDF Board) இறக்குமதி வர்த்தக விலையினை நீக்கியது.
 
இந்த நடவடிக்கையினை இலங்கை ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர். அதேவேளை  இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த வழிவகுப்பதோடு 2020 ஆம் ஆண்டு இலங்கை அரசின் 20 பில்லியன் ஏற்றுமதி இலக்கினை எளிதாக்குவதற்கு துணை போகின்றது.