ரிசாட் பதியுதீனை விமர்சித்து கட்டுரை எழுதிய இக்பாலுக்கு ஹக்கீம் , ஹரீஸ் கொடுத்த சன்மானம் !

hakeem harees

 

எம்.முஹாஜிரீன் 

 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு சார்பான இணையதளங்களில் சாய்ந்தமருது இக்பால் என்பவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை விமர்சித்து எழுதிய கட்டுரையொன்றுக்கு சன்மானம் ஒன்று கிடைத்துள்ளது. அக்கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹகீமின் நேரடி பணிப்பின் பேரில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீசின் செல்வாக்கினாலும் முயற்சியினாலும் இந்த சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.

 

 கராத்தே பயிற்சியில் ஓரளவு தேர்சிபெற்ற இக்பாலுக்கு கிழக்கு மாகாண கராத்தே சங்கத் தலைவர் எனும் பதவி கிடைத்துள்ளதன் மர்மங்கள் தற்போது வெளிவரத்தொடங்கியுளது. கராத்தே கலையில் மிகவும் தேர்ச்சி பெற்ற பலரிருக்கும் போது சாய்ந்தமருது இக்பாலுக்கு இந்த பதவி கிடைத்துள்ளமை குறித்து கரத்தே வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

 

 சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவேன் என தேர்தல் காலத்தில் ரணிலின் முன்னிலையிலும் அதன் பின்னர் கிழக்கின் கூட்டங்களிலும் பகிரங்கமாக அறிவித்திருந்த ஹக்கீம் அத்துடன் கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் இந்த வருடம் ஜனவரி முப்பத்தி ஒன்றுக்குள் பெற்றுதருவேன் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார். எனினும் இன்னும் இது சாத்தியப்படாத நிலையில் இந்த விவகாரம் பற்றிய கட்டுரைகளை எழுதுபவர்களை தடுக்கும் பணியையும் சாய்ந்தமருது இக்பாலிடம் ஹரீஸ் ஒப்படைத்துள்ளதாக நம்பகமாகத் தெரிகின்றது.