தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை சிரியாவில் விமான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம்: ரஷ்யா

 

8a1a4c43-7aad-4b30-9138-9011978a8689_S_secvpf
சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 

இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால், அமைதி பேச்சுவார்ததையில் முட்டுக்கட்டை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, வான்வழி தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். அதற்கு இன்று பதிலளித்த ரஷியா, தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை சிரியாவில் விமான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மஸ்கட் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஷிய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ், விமான தாக்குதல்களை நாங்கள் நிறுத்த மாட்டோம். அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளையான ஜபாத் அல்-நுஸ்ரா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை வெற்றிகொள்ளும்வரை சிரியாவில் எங்கள் வான்வழி தாக்குதல் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.