ஜப்பானில் தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணை ஆரம்பம் !

 

robot-farming

உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று அறிவித்துள்ளது.

கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான இலைக்கோசு தாவர செய்கையை மேற்கொள்வதற்கான இந்த ரோபோ பண்ணையை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் நிர்மாணிக்கவுள்ளது.

47,300 சதுர அடி பரப்பளவில் செயற்படவுள்ள இந்தப் பண்ணையில் ரோபோக்கள் தாவர விதைகளை நாட்டுதல், அவற்றைப் பராமரித்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளன.

இதன் மூலம் தொழிலாளர்களுக்கான செலவு அரைப் பங்காகக் குறைவதுடன் சக்தி செலவினமும் மூன்றில் ஒரு பகுதியாக குறைகிறது.

இந்த உள்ளக பண்ணையில் வளர்க்கப்படும் இலைக்கோசுகளின் செய்கைக்கு இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.