ஒலிம்பிக் போட்டியில் ஹிஜாப் அணிந்த முதலாவது அமெரிக்க முஸ்லிம் பெண் இப்தாஜ் முஹம்மட்!

XXX _HUNGARY WORLD FENCING CHAMPIONSHIPS_4396.JPG S FEN HUNஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

2016ம் ஆண்டுக்கான பருவகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் ஆரம்பிப்பதற்க்கு ஒரு மாத காலம் இருக்கையில் ஒலிப்பிக் விளையாட்டு போட்டிகளில் முக்கிய போட்டியாக இடம் பெற்று வரும் பெண்கள் சப்றே வாள்வீச்சு (Sabre World Cup) போட்டிகளில் தேவையான அளவு திறைமைகளை வெளிக்காட்டியதன் பலனாக அமெரிக்க பிரஜாயுரிமை உடைய இப்தாஜ் மொஹம்மட் எனும் முஸ்லிம் வீரான்கனை 2016ம் ஆண்டுக்கான பருவகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹிஜாப் அணிந்து முதலாவது அமெரிக்க வீரான்கனையாக வாள்வீச்சு போட்டியில் பங்குபற்ற உள்ளார் என்பது அமெரிக்க பெண்மணிகளுக்கும், உலகிற்கும் ஜானாதிபதி பரக் ஒபாமாவின் காலப்பகுதியில் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய உடையான ஹிஜாப் அணிவதற்கு கிடைத்த உரிமையாக பார்க்கப்படுக்கின்ரது.

அமெரிக்காவின் நியூ ஜெரி பிரதேசத்தினை பிறப்பிடமாக கொண்ட இப்தாஜ் முஹம்மட் தனது 13வது வயதிலிருந்தே வாள்வீச்சு போட்டிகளில் ஆர்வம் காட்டிவருவதுடன் தான் கல்வி கற்ற உயர்தர பாடசாலைகளில் இடம்பெற்ற அணைத்து வாள்வீச்சு போட்டிகளிலும் திறமைகளை காட்டியதான் பலனாக Duke University யில் கல்வி பயிலுவதற்கான வாய்ப்பினை பெற்று சப்றே வாள்வீச்சு (Sabre) போட்டிகளில் திறமையினை காட்டுவதற்கான வாய்ப்பினையும் பெற்றார்.