பாடசாலையை தரமுயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்.!

அசாஹீம் 

 

பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் திம்புலாகல வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள கட்டுவன்வில கிராமத்தில் உள்ள கட்டுவன்வில முஸ்லீம் கனிஸ்ட வித்தியாலயத்தை தரம் பத்துக்கு தரம் உயர்த்துமாறு கோரி பிரதேச மக்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இன்று (02.02.2016) இடம் பெற்றது.

8_Fotor

 

கட்டுவன்வில கிராமம் 1957ம் ஆண்டு உறுவாக்கப்பட்ட கிராமமாகும் அதே ஆண்டு அங்கு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது அக்கிராமத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த நாலாயிரம் பேர் வசித்து வருகின்றனர் அவ்வாரு இருந்தும் அக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருகின்றனர்.

 

தற்போது தரம் ஒன்று தொடக்கம் தரம் ஒன்பது வரையுள்ள இப்பாடசாலையில் ஐநூற்றி ஐம்பது மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் இவர்களில் தரம் ஒன்பதில் இருந்து தரம் பத்திற்கு சித்தியடைந்தால் அயல் கிராமமான சேனபுர என்ற கிராமத்திற்கு நாலு கிலோ மீற்றர் தூரத்திற்கு சென்றே தமது கல்வி தொடர வேண்டிய நிலை இப்பகுதி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

11_Fotor

 

வாகனப் போக்கு வரத்து வசதிகள் இல்லாத இக்கிராமத்தில் பெண் பிள்ளைகள் தூர இடங்களுக்கு கால் நடையாக சென்று தங்களது கல்வியைத் தொடர்வதில் சிறமம் இருப்பதால் தரம் ஒன்பதில் தங்களது கல்வியை முடித்துக் கொள்வதால் இளவயது திருமணம் இக் கிராமத்தில் அதிகரித்துக் காணப்படுவதுடன் ஆண் பிள்ளைகளும் தங்களது கல்வியைத் தொடராமல் கூலி வேலைகளுக்கு செல்லும் துர்ப்பாக்கிய நிலை உள்ளது.
அதிபர் உட்பட பதினெட்டு ஆசிரியர்கள் உள்ள இப்பாடசாலையில் தரம் பத்துக்கு வகுப்புக்கள் ஆரம்பிப்பதால் ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பாடசாலை நிறுவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

தங்களது பாடசாலை தரம் உயர்த்தும் நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.