டிஜிட்டல் இந்தியா திட்டம் பெருநிறுவனங்களின் அலங்காரத்திட்டமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி கூறியதாவது:-
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து இணையதள பக்கங்களையும் காண வழி வகை செய்ய வேண்டும். டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரு நிறுவனங்களின் அலங்கார திட்டமாக இருக்க கூடாது. இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் எந்தவித பாகுபாடின்றி இணைய சேவை வழங்கும் திட்டமாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை மோடி அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.