தென்சீனக் கடலில் அமெரிக்கா போர்க்கப்பல் ஆபத்தான நடவடிக்கை : சீனா கடும் எச்சரிக்கை !

china

 

சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு செயற்கை தீவையும் சீனா உருவாக்கி வருகிறது.

அதேபோல சில தீவுகளுக்கு தைவான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கு மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது. இதில் தைவான், ஜப்பான் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று ஏவுகணை அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்காவின் கர்டிஸ் வில்பர் போர் கப்பல், சர்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் சென்றது இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளது ஆபத்தான நடவடிக்கை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவின் இறையான்மையை பாதுகாப்பதற்காக, தங்கள் நாட்டின் பாதுகாப்பு படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீன பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் யான் யுஜுன் கூறியுள்ளார். 

3c9a4d15-6045-4f4e-9bd4-2b4050cbfd03_S_secvpf

தங்களிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் சர்வதேச விதிகளை மீறி 12 கடல் மைல்களுக்கு உள்ளாக அமெரிக்காவின் போர் கப்பல் வந்ததாக அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், அமெரிக்காவின் நடவடிக்கை நெறியற்ற, பொறுப்பற்றச் செயல் என்றும் யாங் கூறியுள்ளார்.

முன்னதாக, இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அமெரிக்கா அந்த கடல் பகுதியில் சர்வதேச நாடுகளுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும், சீனாவிற்கு எச்சரிகை விடுக்கும் வகையிலும் தங்களது போர் கப்பல் ரோந்து சென்றதாக தெரிவித்துள்ளது.