முதன்முதலாக மசூதிக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா !

 

 

முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

images

நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான அதிபர் ஒபாமாவின் இந்த சந்திப்பு அமையும் என அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யா நாட்டை சேர்ந்த முஸ்லிம் வம்சத்தை சேர்ந்த தந்தைக்கும், கிறிஸ்தவ தாய்க்கும் மகனாக பிறந்த பராக் ஹுசைன் ஒபாமா, தொடர்ந்து இருமுறையாக அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுள்ள நிலையில் முதன்முதலாக இப்போதுதான் மசூதிக்கு செல்கிறார் என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.