இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் முன்னாள் தலைவரான ரொமேஷ் களுவிதாரன ஆசிய கிரிக்கெட் தொடருக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ரொமேஷ் களுவிதாரன கூறினார்.
ஆறு வருடங்களுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த ரொமேஷ் களுவிதாரன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த 18 ஆம் திகதி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
கோல்ட்ஸ், காலி, செபஸ்தியன் ஆகிய கிரிக்கெட் கழகங்களுக்காக விளையாடியுள்ள ரொமேஷ் களுவிதாரன 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் விளையாடியுள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 49 டெஸ்ட் மற்றும் 189 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.