றிசாதின் சமூக நல அழைப்பும் திரிபுபடுத்திய ஹக்கீம் தரப்பும் !

அம்பலவானர் நடேஷ் -சாவகச்சேரி  
இலங்கை வாழ் தமிழ் பேசும் சமுகத்தின் நலன்  தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடுத்த அழைப்பு தொடர்பில் முகா தரப்பினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.
முஸ்லிம் மக்களுக்காக மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சமுகத்திற்கான நலனை கருத்திற்கொண்டு, அவர்களின் கௌரவமான இருப்பை நோக்காகக் கொண்டு ஹக்கீம் மட்டுமன்றி அதாவுல்லாஹ், பேரியல் அஷ்ரப், மனோ கணேசன் உள்ளிட்ட சிறுபான்மையின தலைவர்களுடன் இணைந்து அந்த நோக்கை வெற்றி பெறச் செய்யும் வகையில் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாரன ரிசாத் பதியுதீன் அழைப்பு விடுத்திருந்தார்.
rauff hakeem , rishad
ரிசாத் பதியுதீனின் இந்த சமுக நலன் நோக்கிய அழைப்பு முகா தரப்பினரால் திரிவுபடுத்தப்பட்டு அவ்வப்போது ஒரு சில இணையத்தளங்களிலும் மற்றும் முகநூல்களிலும் வெளியாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ரிசாத் பதியுதீனின் இலக்குகளெல்லாம் தான் தோற்றாலும் பரவாயில்லை. சமுகம் தோற்றுவிடக் கூடாது என்பதாகும். அதற்காகத் தான் எந்தத் தியாகத்தையும் செய்தவதற்கு துணிந்த நிலையில், சமுகத்தின் தன்மானத்தை காக்க மேற்சொன்னவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மைத்திரி அரசைப் பொறுத்த வரையில் சிறுபான்மையினர் மத்தியில் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் மைத்திரி – ரணில் அரசு மீது சிறிதளவு நம்பிக்கையீனம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாப்பு சீர் திருத்தம், தேர்தல் முறை மாற்றம் மற்றும் இன்னோரன்ன சில விடயங்களில் சிறுபான்மையின சமுகத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடலாம் என்ற அச்சம் பரவலாக சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு கட்டத்தில் தான் ரிசாத் பதியுதீன் இந்த அழைப்பை பொதுவாக சிறுபான்மையின தலைவர்களுக்கு வெளிப்படையாக விடுத்திருந்தார்.
ஆனால் இந்த சமுக நல அழைப்பை சிறுமைப்படுத்த நினைத்த முகா தரப்பினர் கிஞ்சித்தேனும் சமுக நல அக்கரை அற்று ரிசாதின் அழைப்பை தூசிப்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் – கிருஸ்தவ மக்கள் மத்தியிலும் வேதனையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்சொன்ன அழைப்பானது ஹக்கீமுடன் இணைய ரிசாத் பதியுதீன் நிபந்தனையற்ற ஆதரவு, சமுகத்தின் காவலன் ஹக்கீம் என்பதை ரிசாத் உணர்ந்து கொண்டார், ஹக்கீமுடன் இணைவதென்றால் ரிசாத் தனது கட்சியான அ.இ.ம.கா வை கலைத்துவிட வேண்டும் என்றெல்லாம் இன்று ஹக்கீம் சார் , முகா சார் முகநூல், இணைய நண்பர்கள் பக்கம் பக்கமாக அறிக்கை விடுவதை அவதானிக்க முடிகின்றது.
30 வருட அனுபவம் கொண்ட, சமுக நலனுக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அல்லது அதன் தலைமைத்துவம் சமுக நலனுக்காக வேண்டியேனும் இவ்வாறானதொரு அழைப்பை விடுத்திருக்காத போதிலும் வெறுமனே 10 வருடத்திற்குள் அ.இ.ம.கா என்ற கட்சியை உருவாக்கி தலைமையை ஏற்றுள்ள ரிசாத் பதியுதீன் இவ்வாறு ஒரு அறிக்கையை விட்டிருப்பது முஸ்லிம் சமுகத்தினர் மட்டுமன்றி எமது சமுகமான தமிழ் சமுகத்தினர் மத்தியிலும் பெரும் ஆதரவை தோற்றுவித்துள்ளது.
நான் மேற்சொன்னதெற்கிணங்க முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி – அஸ்ரப் அன்று கூறியது போல், அஸ்ரப் அன்று உருவாக்கியது போல், மக்கள் காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி சகோதர இனமான தமிழ் மற்றும் கிருஸ்தவ மக்களுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ரிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் இந்த அழைப்பை தமிழ் தாயின் வயிற்றில் பிறந்தவன் என்ற ரீதியில் பெருமைப்படுவதோடு அதற்கு வாழ்த்தும் தெரிவிக்கவும் விரும்புகின்றேன்.
ரிசாதின் இந்த அழைப்பை முகா தரப்பினர் இவ்வாறாக திரிபுபடுத்தி விமர்சனம் செய்தாலும், ஹக்கீமின் பெயரில் போலியான அறிக்கை விட்ட போதிலும் ரவூப் ஹக்கீமின் உண்மையான நிலைப்பாடு என்னவென்பதையும் அவராகவே ஆங்கில மொழி ஊடகவியலாளர் ஒருவருக்கு விபரித்திருப்பதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டாமல் இருப்பது நாம் விடும் தவறென்று நினைக்கின்றேன்.
ரிசாத் அழைப்பு விடுத்த மறு நிமிடம் குறித்த அந்த ஊடகவியாளர் ஹக்கீமை தொடர்பு கொண்டு ரிசாதின் அழைப்பு குறித்து வினவியவேளை பின்வருமாறு கூறியுள்ளார்.
‘ ரிசாதின் அழைப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அது மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நிச்சயமாக அழைப்பு விடுத்திருக்க வேண்டியவன் நான் தான். அதில் ரிசாத் முந்திக் கொண்டார். என்று சிரித்தவாறு கூறிக் கொண்ட ஹக்கீம் இந்த விடயத்தில் ரிசாத் கூறியதைப்போன்றும்  அதாவுல்லாஹ், பேரியல் அஸ்ரப், மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரையும் சந்தித்து உரையாட நானும் எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் பேதமின்றி சமுக நல நோக்கோடு ரிசாத் பதியுதீனும் ஹக்கீமும் இணைந்து செயற்பட இருக்கும் இந்த தருணத்தை குழப்பியடித்து அற்ப சொற்ப சின்னத்தனமான இலாபங்களுக்காக பிரித்தாள முனையும் சதிக் கும்பலை ஹக்கீம் தடுத்து நிறுத்துவதோடு ஆரோக்கியமான    கருத்துக்களை ரிசாதின் அழைப்புக்கு வெளிப்படையாக பதில் உரைக்க வேண்டும் என்பதை முஸ்லிம் சமுகத்தினர் மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ள அவாவாகும்.