ஜெர்மனி பிரதமர் மெர்கல் செல்வாக்கு சரிந்தது : பதவி விலக வலியுறுத்தல் !

ஜெர்மனியின் பலம் வாய்ந்த பிரதமராக ஏஞ்சலா மெர்கல் இருந்து வருகிறார். இவர் உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை வரவேற்று அடைக்கலம் அளித்து வருகிறார்.

germany prime minister
கடந்த ஆண்டு மட்டும் இதுபோன்று 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் அகதிகளாக ஜெர்மனியில் தங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஏஞ்சலா மெர்கலின் செல்வாக்கு பொதுமக்களுடையே சரிந்துள்ளது.

சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. அகதிகள் தங்க இடமளிப்பதில் ஏஞ்சலா மெர்கல் மேற்கொண்டுள்ள கொள்கை திட்டத்தை பெரும்பாலான ஜெர்மனி மக்கள் எதிர்க்கின்றனர். 45 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இவர் பதவி விலக வலியுறுத்தியுள்ளனர்.