இணங்கிக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் !

UN-Secretary-General-Ban-Ki-moon

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இது தொடர்பான நீதிப்பொறிமுறை உட்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதை செயலாளர் பான் கீ மூன் அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைமீறல்கள் குறித்த தேசிய ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொறிமுறைகளுக்கு தாம் உதவ தயாராகவுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே டுஜாரிக் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளுக்கு இலங்கையும் அனுசரணையாளர் என்பதை டுஜாரிக் நினைவுபடுத்தியுள்ளார்.