இ.போ.ச சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் பகிஸ்கரிப்பு !

05_Fotor

அசாஹீம்

 

இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையின் சாரதி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் ஊழியர்கள் இன்று (29.01.2016) கடமையில் ஈடுபடாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ் கல்முனையில் இருந்து பருத்தித்துரைக்கான பஸ் சேவையினை தொடர்ந்து நடாத்தி வருகின்றது பருத்தி துரையில் இருந்து காலை 09.00 மணிக்கு புறப்படும் பஸ் கல்முனையை இரவு 07.30 மணியை வந்தடையும்.

07_Fotor
இந்த பஸ் வவுனியாவுக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து 12.35க்கு கல்முனை நோக்கி புறப்படும் இதே வேளை வவுனியாவில் இருந்து தனியார் பஸ் மதியம் 12.15 மணிக்கு கல்முனை நோக்கி புறப்படுவது வழக்கம் தனியார் பஸ்சை இலங்கை போக்குவரத்து பஸ் முந்தி வருவதால் தினமும் இரண்டு பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் நேற்று (28.01.2016) பொலநறுவையில் வைத்து தனியார் பஸ் நடத்துனரும் சாரதியும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி மற்றும் ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

11_Fotor

 

வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சாலையின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் பொலநறுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு சாரதி வாழைச்சேனை சாலை முகாமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடைபெற்ற சம்பவத்தை தெரியப்படுத்தியதோடு தனக்கு தொடர்ந்து பஸ்சை கல்முனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உடப்பு வருத்தமாகவுள்ளது அதனால் வேறு ஒரு சாரதியை மாற்றி அனுப்பு மாரும் கோறியுள்ளார்.
இதற்கிணங்க வாழைச்சேனைக்கு இலங்கை போக்குவரத்து பஸ் வந்ததும் வாழைச்சேனை பொலிஸில் நடந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் முறைப்பாடு செய்ததுடன் சாரதி மாற்றப்பட்டு பஸ் கல்முனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காயப்பட்ட சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கறுவாக்கேணி என்ற இடத்தில் வைத்து தனியார் பஸ் சாரதி பஸ்ஸை இடைமறித்து இனந்தெரியாத பொது மக்கலால் தாக்கப்பட்டு தனியார் பஸ் சாரதியும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

08_Fotor
தனியார் பஸ் சாரதி வாழைச்சேனை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலயே வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் சாரதி கல்முனைக்கு சென்று மீண்டும் வாழைச்சேனைக்கு வந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதியை விடுவிக்க வேண்டும் என்றும் தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்ற கோறிக்கையிலயே இன்றய பனிப் பகிஸ்கரிப்பு இடம் பெறுவதாகவும் கைது செய்யப்பட்ட சாரதி விடுதலை செய்யப்படா விட்டால் இப் பனிப்பகிஸ்கரிப்பு நாளை கிழக்கு மாகாணம் சார்ந்ததாக இருக்கும் என்று வாழைச்சேனை சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.