நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கின்றார்.
பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கூட்டு எதிரணியே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.