அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக பரவிவரும் கொடிய உயிர்க்கொல்லியான ஸிக்கா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் ஆகலாம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, கனடா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்துள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதவாக்கில் இதை பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தப்படும்.
பின்னர், உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒருமாதத்துக்கு பிறகு அவசர தேவைக்காக அனுப்பி வைக்கப்படும் என இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த டாக்டர்களில் ஒருவரான கேரி கோபின்கர் நேற்று தெரிவித்துள்ளார்.