அமைச்சரவையின் பின்னர் நேற்று (27) ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான கருத்தாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக மக்களும், தனியார் துறையினரும் தமது பொறுமையை இழந்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தாம் மாகாணங்களுக்கு விஜயம் செய்யும் போது 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.
எனவே, கதைகளை விடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் மஹிந்தவின் ஆதரவு பெருகி வருவதை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி இந்த அதிருப்தி நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.