மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கு குறைந்தபட்சம் மூன்று நாள் விடுமுறை!

மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கு மூன்று நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியின் பிரசவத்தின் போது கணவருக்கும் குறைந்தபட்சம் மூன்று நாள் விடுமுறை வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி நட்டாசா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.

epdpnewsNatasha-Baleendren_16049

மகப்பேற்றின் போது தந்தையாருக்கும் விடுமுறை வழங்கும் இந்த நடைமுறைக்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும் வரைவுத்திட்டமொன்றை அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. 

பிள்ளை பிறந்ததன் பின்னர் தாயின் பொறுப்பிற்கு நிகராக தந்தைக்கும் பொறுப்புக்களை வழங்கும் நோக்கிலேயே இந்த விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது. 

குடும்பம் ஒன்றில் தந்தைக்கான பொறுப்பினை மாற்றியமைத்து சமூகத்தில் தந்தைக்கும் குழந்தை பராமரிப்பு குறித்த பணிகளை அதிகளவில் ஒப்படைக்கும் வகையில் இந்த விசேட விடுமுறைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நட்டாசா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.