மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதிய கட்சியை உருவாக்க இது சிறந்த சந்தர்ப்பம் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆர்.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால், அவரிடம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களின் எதிர்ப்புகள் தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் இல்லை எனில் யுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கும் எனவும், தனக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டிருக்காது எனவும் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.