சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உடற்பயிச்சி நிகழ்வு!

DSC07846_Fotorஅஷ்ரப் ஏ சமத்

உற்சாகமான வாழ்க்கையின் மூலம் அனைவருக்கும் சுகம், மகிழ்ச்சி மற்றும்
ஆனந்தம் எனும் தொனிப்பொருளில் விளையாட்டு மற்றும் உடற்பயிச்சி
ஊக்குவிப்பு வாரத்தையும்  மற்றும் சுகாதார வாரத்தையும் முன்னிட்டு இலங்கை
சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உடற்பயிச்சி நிகழ்வு இன்று (27)
கலை சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

 

DSC07962_Fotor

இவ் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும்  சுகாதார, மற்றும்
சுதேச மருத்துவத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்ன  விளையாட்டுதுறை அமைச்சர்
தயாசிறி ஜயசேகர,  சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை பிரதி  அமைச்சர்
பைசால் காசிம் அவர்களும் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள்,
ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வு சுகாதார அமைச்சின்
முன்றலில் நடைபெற்றது.  இன்று நாடு பூராவும் உள்ள சுகதார திணைக்களங்களில்
உற்சகமான வாழ்க்கையின் அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம்
அனுஸ்டிக்கப்படுகின்றது.