குற்றம் சுமத்தப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,
நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நிதி மோசடிப் பிரிவிற்கு அழைக்கப்படும் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களேயாகும்.
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் விசாரணைகள் பக்கச்சார்பான அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமை அநீதியானது என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.