வயதெல்லை; கஷ்டங்களுடன் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு இளைக்கப்படுகின்ற மாபெரும் அநீதியாகும் !

anwar

 

  2016ம் ஆம் ஆண்டின் கிழக்கு மாகாண சபையினுடைய முதலாவது கூட்டத் தொடரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களினால் கொண்டுவரப்பட்ட அவசரப் பிரேரணையின் மீதான விவாதத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நாட்டில் ஏனைய மாகாண சபைகள் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் உச்ச வயதெல்லையானது 45 ஆக காணப்படுகின்ற பொழுதும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இந்த வயதெல்லையை 35 ஆக வரையறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

 

 மேலும் வட மாகாண சபை, வட மத்திய மாகாண சபை 45 வயது வரையுள்ள பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு மாத்திரம் தற்பொழுது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரியுள்ள நிலையில் அதற்குரிய வயதெல்லையை 35 ஆக வரையறுத்திருப்பது கடந்த கால போர்ச் சூழலுக்கு மத்தியில் மிகுந்த கஷ்டங்களுடன் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு இளைக்கப்படுகின்ற மாபெரும் அநீதியாகும் எனவும் சபையில் பிரஸ்தாபித்தார்.

 

இது விடயத்தில் கிழக்கு மாகாண சபை மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக நடவடிக்கை எடுத்து 45 வயதிற்குட்பட்ட அணைத்து பட்டதாரிகளுக்கும் சந்தரப்பம் வழங்க வேண்டுமென சபையில் கோரியதற்கமைய பதிலளித்து பேசிய மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி அவர்கள் அதனை வரவேற்றதுடன் இது விடயமாக கிழக்கு மாகாண சபையினால் அமைக்கப்பட்டுள்ள உப குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீரக்கமான முடிவொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்து பேசினார். இந்த கோரிக்கையானது கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஊடகப்பிரிவு