சாய்ந்தமருது-02 கடற்கரை வீதியில் இருக்கும் சிறுவர் பூங்காவின் உபகரணங்களை இனம்தெரியாதோர் அகற்ற முயற்சி!!!

 

எம்.வை.அமீர்-

 

சாய்ந்தமருது-02 கடற்கரை வீதியில் இருக்கும் சிறுவர் பூங்காவின் உபகரணங்களை இனம்தெரியாதோர் அகற்ற முயற்சி செய்துள்ளதாகவும்   குறித்த பூங்காவின் சுற்று வேலியை சேதப்படுத்தியுள்ளதாகவும்  அந்த பிரதேசத்தில் இருக்கும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

3_Fotor

 

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடற்பேரலையைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பல்வேறு நிர்மாணப்பணிகளை செய்திருந்தனர். அந்த வகையில் சாய்ந்தமருது-02 கடற்கரை வீதியில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

1_Fotor

குறித்த சிறுவர் பூங்கா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் சிறுவர்களின் பொழுதுபோக்குக்கு பயன்பட்டிருந்த போதிலும் காலப்போக்கில் சரியான பரமரிப்பின்மையால் அழிவுற்று காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.