உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்ஸலாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று காலை டுபாயிலிருந்து வந்த ஈ.கே 650 விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கைத் தலைவர் ஒருவருக்கு முதல் தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்டவர்களும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
46 தடவையாக நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களும், 1500 பொருளாதார நிபுணர்கள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.